இன்னல்மிக்க சூழலில் விநாயகர் சதூர்த்தியான இன்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படம் அமேசானில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் என்ற முறையில் வேறு வழியின்றி பலரையும் மனதில் வைத்து மனசாட்சியுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இயக்குனரின் பல ஆண்டு கால உழைப்பு, கலைஞர்களின் கற்பனைத்திறன் போன்றவற்றை சரியான நேரத்தில் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தம் நோக்கம் எனவும் சூரியா கூறியுள்ளார். மேலும் சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையில் 5 கோடி ரூபாயை கொரோனா காலத்தில் முன்நின்று சேவையாற்றுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சூர்யாவின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரிய ஹீரோக்களின் படத்தை வைத்தே மக்களை தியேட்டருக்கு வரவைக்க திட்டமிட்ட நிலையில் சூர்யாவின் இந்த முடிவு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சூர்யாவின் மனைவில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை ஓடிடி யில் வெளியிட்டதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதோ சூர்யா வெளியிட்ட டிவிட்டர் அறிக்கை.!
Vinayagar Chathurthi wishes to all!#SooraraiPottruOnPrime @PrimeVideoIN pic.twitter.com/ZdYSF52ye2
— Suriya Sivakumar (@Suriya_offl) August 22, 2020
கருத்துகள்
கருத்துரையிடுக