நடிப்பின் அரக்கன் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படமான ”சூரரைப் போற்று” இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. சுதா கொங்கராவின் முந்தைய திரைப்படமான இறுதிச் சுற்று மெகாஹிட் ஆனதால் சூரரைப் போற்று மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் டீசரும் பட்டித் தொட்டி எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவ்வாறான சூழலில் செக் வைத்தது கொரோனா. படத்தை எடுத்து முடித்து விட்டு வெளியிடமுடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை அதோகதியாக உள்ளது. காரணம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படுவது தள்ளிப்போய் வருகிறது. இதனால் திரையரங்கம் சார்ந்த ஏராளமான ஊழியர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இன்னல்மிக்க சூழலில் விநாயகர் சதூர்த்தியான இன்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படம் அமேசானில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் என்ற முறையில் வேறு வழியின்றி பலரையும் மனதில் வைத்து மனசாட்சியுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அ...