பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவசர சிகிச்சை மூலம் சிறிது உடல்நலம் தேறி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.அவரது சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன், நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்து வருகிறார்கள். நடிகர் பொன்னம்பலத்திடம் அவர்கள் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் பொன்னம்பலம் விரைவில் பூரண குணமடைந்து திருப்ப வேண்டும் என்று பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்தி கொண்டிருக்கும் நிலையில், பொன்னம்பலம் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த போது பொன்னம்பலம் தன்னுடைய நண்பரின் மகனின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக அஜித்திடம் பண உதவி கேட்டுள்ளார்
அதன் பின்னர் அன்று மதிய உணவிற்கு அஜித் வந்தபோது “ஜி மருத்துவ செலவிற்காக பணம் கேட்டேனே” என கேட்டுள்ளார். “அட அதை காலையிலேயே மருத்துவமனைக்கு அனுப்பிட்டேன்” என அஜித், பொன்னம்பலத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தற்போது சிறுநீரக மாற்றும் காரணமாக அவஸ்த்தைபட்டு வரும் பொன்னம்பலமும் அஜித் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அஜித்தும் அவரது மருத்துவத்துக்கு பண உதவி தந்து உதவினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக