முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிருகத்தனமாக வெளியான கே ஜி எஃப்-2 புதிய போஸ்டர்..

கன்னட சினிமாவை அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருந்த நேரத்தில் மிக பிரமாண்டமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் செம வரவேற்பு பெற்று திரைப்படம் கேஜிஎப் சாப்டர் ஒன்.
கன்னட நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்திற்கு பிறகு தற்போது இந்திய நடிகராக மாறி உள்ளார். கேஜிஎப் சாப்டர் 2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்கு ஏற்றார்போல் படத்தில் நடிகர் நடிகைகளின் தேர்வுகளில் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎப் சாப்டர் ஒன் படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேரக்டர் ஆதிரா.

கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் ஆதிரா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிருகத்தனமான கதாபாத்திரமாக அவருக்கு கிடைத்துள்ளதாம்.


இதனால் அந்த கதாபாத்திரத்தை திரையில் பார்க்க பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருடைய கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்று ஜூலை 29 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அப்டேட் வெளியிட்ட போஸ்டரே தெறிக்க விடுகிறது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் அந்த அப்டேட் நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் லிங்க் இதோ உங்களுக்காக !

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பிறமொழி படங்களை பார்கின்றனர் அதிலும் மலையாள மொழி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திரில்லர், ரொமான்டிக், டிராமா என்று அனைத்திலும் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற படங்கள் நிறைய உள்ளது. மலையாள மொழியில் இது போன்ற படங்களை பொழுதுபோக்கிற்காக தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசிக்கின்றனர் . ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். அய்யபனும் கோஷியும்:  எக்ஸ் மிலிட்டரி ஆபீஸராக கௌசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரித்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் நாயராக பிஜுமேனன் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப் பட்டிருக்கும். மலையாள மக்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் அதிக அளவில் பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்படுகிறது. முழு படம் பார்க்க:  Prime Video அஞ்சாம் பத்திரா:  மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், உன்னிமயா பிரசாத், ஜினு ஜோசப் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம்தான் அஞ்சாம் பத்திர...

For Regular Updates Follow